பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டரிகம பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 20 கிராம் 780 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பண்டாரகம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவொன்றிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று புதன்கிழமை (15) ரொட்டரிகம பகுதியில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் (16) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சந்தேக நபரை விளக்கமறியலில் வைப்பதற்கும், பின்னர் பண்டாரகம பொலிஸ் அதிகாரிகளால் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
