Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக குறைந்த விலைக்கு கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்படலாம் - அரசாங்கம் அறிவிப்பு
BusinessVirakesari

தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக குறைந்த விலைக்கு கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்படலாம் - அரசாங்கம் அறிவிப்பு

July 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது.
  2. 02அத்தியாவசிய சேவைகளை தடையின்றி வழங்க வேண்டுமென அமைச்சர் தெரிவித்தார்.
  3. 03மத்திய கிழக்கு போரின் விளைவாக எரிபொருள் சிக்கல்கள் உள்ளன.
  4. 04அரசியலுக்கு சவால்கள் இருந்தாலும், முன்னேற்றம் அடைய வேண்டும்.
  5. 05எரிபொருள், மின்சாரம் மற்றும் உரம் அரசின் முதன்மை இலக்கு.
  6. 06சர்வதேச எண்ணெய் விலை ஆலோசனையானது.
  7. 07கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தும் உள்ளன.

(எம்.மனோசித்ரா)

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்த்து, அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றித் தொடர்ந்து வழங்குவதற்காக உலகச் சந்தையில் நிலவும் மிகக் குறைந்த விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமல் போகலாம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (15) நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சவால்களை எதிர்கொள்வதில், கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்கம் மிகவும் அவதானமாகச் செயல்பட்டு வருகிறது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை சீராகி வரும் போதிலும், ஏதேனும் ஒரு துறையை முடக்கிவிட்டு எம்மால் முன்னோக்கி நகர முடியாது.

அவ்வாறு முடக்கினால் அதனை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். எனவே, எரிபொருள், மின்சாரம் மற்றும் உரம் ஆகிய அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றித் தொடர்ந்து வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும். தற்போது டீசல் நுகர்வு 11 வீதத்தாலும், பெற்றோல் நுகர்வு 9 வீதத்தாலும் குறைந்துள்ள போதிலும், மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் ஒதுக்கீட்டு முறையைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் மசகு எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கங்களுக்கு அமைவாகவே உள்நாட்டு எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படும். சர்வதேச ரீதியில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கைகள் குறித்துப் பேசப்பட்டாலும், எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. இதனால், நாட்டில் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து எரிபொருளை விநியோகிப்பதை உறுதிப்படுத்த நாம் முயற்சிப்பதால், உலகச் சந்தையில் நிலவும் மிகக் குறைந்த விலைக்கு எம்மால் எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமல் போகலாம் என்றார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253314
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
எரிபொருள்சுகாதாரம்சேவைகள்மத்தியகிழக்குஅரசு
BestWeb.lk Top Web 2026 June Qualified