கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 124ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, உலகளாவிய காமராஜர் ஞாபகார்த்த மன்றம் – இலங்கை (KMGF Lanka) ஏற்பாட்டில் கொழும்பு 14, மாவத்தை பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தமிழ் மகா வித்தியாலய ஆரம்பப் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் KMGF Lanka அமைப்பின் தலைவர் அமிர்தம் ஜெயகுமார் கலந்து கொண்டு, மாணவர்களிடம் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.
