Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம் மீண்டும் திறப்பு
WorldVirakesari

ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம் மீண்டும் திறப்பு

July 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம் மீண்டும் திறக்கப்படவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. 02தற்காலிக நிலைய அதிபர் நியமனம் செய்யப்பட்டது.
  3. 03மூடப்பட்ட இருக்கை மற்றும் அன்ததொல புகையிரத உப-நிலையங்கள் சேவைகளை மீண்டும் வழங்க இருக்கின்றன.
  4. 04புதிதாக 25 உப-நிலையங்களுக்கு உப-நிலைய அதிபர்கள் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
  5. 05ஆட்சேர்ப்பு செயல்முறை இன்றுவரை நிறைவடையவில்லை.
  6. 06திணைக்கள வருடத்தின் உயர் நிர்வாக திறமையின்மையால் delays நடைமுறை நீண்டுள்ளது.

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம், தற்காலிக நிலைய அதிபர் ஒருவரின் நியமனத்துடன் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையத்தில் கடமையாற்றி வந்த உப-நிலைய அதிபர் இராஜினாமா செய்ததை அடுத்து, புகையிரத திணைக்களம் அண்மையில் இந்நிலையத்தை தற்காலிகமாக மூடத் தீர்மானித்திருந்தது. தற்போது அங்கு தற்காலிக நிலைய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டு, பயணியர் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுக் கிடந்த அக்குரல மற்றும் அன்ததொல ஆகிய புகையிரத உப-நிலையங்களின் சேவைகளும் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்படவுள்ளன. இன்றைய தினம் அல்லது நாளைய தினத்திற்குள் தற்காலிக நிலைய அதிபர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டு பொதுமக்கள் சேவைகள் ஆரம்பிக்கப்படும்.

இந்த தற்காலிக நியமனங்கள் குறித்து புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர சில முக்கிய விபரங்களை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் 25 உப-நிலையங்களுக்கு புதிய உப-நிலைய அதிபர்களை நியமிப்பதற்காக கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது. எனினும், ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையிலும் இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை இதுவரை நிறைவடையவில்லை.

திணைக்களத்தின் உயர் நிர்வாகத்தின் திறமையின்மை காரணமாகவே இந்த நியமனங்கள் தாமதமாகி வருகின்றன. இதன் விளைவாக, தற்போது பணியில் உள்ள நிலைய அதிபர்களைக் கொண்டு கூடுதல் செலவில் இந்த வெற்றிடங்களை நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253374
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
புகையிரதம்நிர்வாகம்சேவைகள்நியமனம்நாடகம்
BestWeb.lk Top Web 2026 June Qualified