Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
நீதித்துறையை கட்டுப்படுத்தவோ ஆக்கிரமிக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை ; அதன் சுயாதீனத்தை முன்னிலைப்படுத்திச் செயற்பட்டோம் - சாகர காரியவசம்
PoliticsVirakesari

நீதித்துறையை கட்டுப்படுத்தவோ ஆக்கிரமிக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை ; அதன் சுயாதீனத்தை முன்னிலைப்படுத்திச் செயற்பட்டோம் - சாகர காரியவசம்

July 16, 2026·3 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01சேவை காலத்தை நீட்ட செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது.
  2. 02நீதித்துறை சுயாதீனத்தை முன்னிலைப்படுத்துகிறோம்.
  3. 03அரசியல்மயப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்புகள் பற்றி கூறப்பட்டது.
  4. 04அரசாங்க மேலோட்டத்தைக் கையகப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
  5. 05எமது நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் கவனிக்க வேண்டுகிறோம்.
  6. 06பொது நம்பிக்கையை மதிப்பீடு செய்ய தேர்தலை நடத்த வேண்டும்.

(இராஜதுரை ஹஷான்)

பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களுக்கும் சேவை காலத்தை நீட்டித்து அவர்களை மகிழ்வித்து நீதித்துறையின் பிரதான கட்டமைப்பை கட்டுப்பாட்டுக்குள் வைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதித்துறையை கட்டுப்படுத்தவோ அல்லது ஆக்கிரமிக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. நீதித்துறையின் சுயாதீனத்தை முன்னிலைப்படுத்திச் செயற்பட்டோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற அமர்வின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் பொலிஸ் திணைக்களம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் திணைக்களம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடை பேச்சாளர்கள் இந்த அரச நிறுவனங்களின் உயர்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தை அரசியல்மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. சுயாதீன அரச நிறுவனங்களை கையகப்படுத்தி அதனூடாக அரச நிர்வாக கட்டமைப்பை தமக்கு ஏற்றாற்போல் செயற்படுத்த முனைவது முறையற்றது. அரசாங்கத்தை கைப்பற்றிவிட்டோம். ஆனால், அரச அதிகாரத்தை இன்னும் கைப்பற்றவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது இதன் வெளிப்பாடாகும்.

பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களுக்கும் சேவைக் காலத்தை நீட்டித்து அவர்களை மகிழ்வித்து நீதித்துறையின் பிரதான கட்டமைப்பை கட்டுப்பாட்டுக்குள் வைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

நீதித்துறையை கட்டுப்படுத்தவோ அல்லது ஆக்கிரமிக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. நீதித்துறையின் சுயாதீனத்தை முன்னிலைப்படுத்திச் செயற்பட்டோம்.

நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஆகவே இந்த நடவடிக்கைகளில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மீதான மக்கள் நம்பிக்கை வளர்ச்சி பெற்றுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. எவ்வாறான கருதுகோளுக்கு அமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இவ்வாறான அறிக்கை மீது நம்பிக்கை கிடையாது.

அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை அறிவதற்கு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் அறிக்கை வெளியிடத் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தினால் மக்கள் சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்துவார்கள். அப்போது ஜனாதிபதி மீதான மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் தரத்தை விளங்கிக்கொள்ளலாம் என்றார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253409
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
நீதித்துறைஅரசாங்கம்கொள்கைகள்சுயாதீனம்மனிப்பான்
BestWeb.lk Top Web 2026 June Qualified