Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைவு வரவேற்கத்தக்கது - லால் காந்த
PoliticsVirakesari

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைவு வரவேற்கத்தக்கது - லால் காந்த

July 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01எதிர்க்கட்சியுடன் ஒன்றிணைவது பயனில்லை.
  2. 02தமிழ் - முஸ்லிம் கட்சிகள் இணைந்து உள்ளன.
  3. 03தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வரவேற்கத்தக்கதா.
  4. 04விவசாயிகளின் கோரிக்கைகள் தீர்க்கப்படுகின்றன.
  5. 05எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள் அரசியல் காரணிகள் உட்படுகின்றன.
  6. 06சஜித் பிரேமதாச முன்னாள் அரசின் நேரம் குறித்து விமர்சனம்.
  7. 07நிதி ஒதுக்கீட்டுக்கு விசாரணை தேவை.
  8. 08அரசியலில் மேலும் பயனுள்ள இடம் չկա.

(இராஜதுரை ஹஷான்)

எதிர்க்கட்சித் தலைவருடன் ஒன்றிணைவது இனி எவ்வித பயனுமில்லை என்பதை முன்கூட்டியதாக உணர்ந்தே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் - முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்துள்ளன. இது சிறந்ததே. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைவு வரவேற்கத்தக்கது என விவசாயம், கால்நடை மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.

கண்டியில் இன்று (16) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்துள்ளோம். மானிய விலைக்கே உரம் தற்போது விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஏதாவதொரு விடயத்தை எதிர்க்கட்சித் தலைவர் கையில் எடுக்கிறார். ஒருசில பிரச்சினைகளின் பின்னணியில் அரசியல் காரணிகள் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

விவசாயிகளின் உரிமை பற்றி தற்போது பேசும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் எவ்வாறு செயற்பட்டார். விவசாயிகளுக்கு எவ்வாறு வீடுகளை நிர்மாணித்து கொடுத்தார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்துள்ளோம். நெல் கொள்வனவுக்கு நியாயமான வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த விடயத்தை அரசியலாக்கும் முயற்சியை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவருடன் ஒன்றிணைவது இனி எவ்வித பயனுமில்லை என்பதை முன்கூட்டியதாக உணர்ந்தே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் - முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்துள்ளன. இது சிறந்ததே. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைவு வரவேற்கத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவருக்கு இனி அரசியல் இல்லை, அவருடன் ஒன்றிணைந்திருந்தால் தம்மை தெரிவுசெய்த மக்களுக்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியாது என்பதை தமிழ் மற்றும் முஸ்லிம் பிரமுகர்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள் என்றார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253408
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
தமிழ்முஸ்லிம்பொதுத்திணைஇராஜியல்விவசாயம்
BestWeb.lk Top Web 2026 June Qualified