Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணைகள் வெறும் ஊடக நாடகங்களே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சாடல்
PoliticsVirakesari

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணைகள் வெறும் ஊடக நாடகங்களே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சாடல்

July 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபத்திற்காக பிரச்சினைகளை பயன்படுத்துகின்றனர்.
  2. 02சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
  3. 03நாடு வெள்ளம், டெங்கு நோய் போன்ற பிரச்சினைகள் உள்ளன.
  4. 04எதிர்க்கட்சியினர் உடனே ஜி. எல். பீரிஸின் வீட்டுக்கு ஓடுகிறார்கள்.
  5. 05நம்பிக்கையில்லா பிரேரணைகள் பெரும்பாலும் பாராளுமன்றத்திற்கு சேர்க்கப்படுவதில்லை.
  6. 06கல்வி அமைச்சருக்கு எதிரான போராட்டங்கள் தோல்வியடைந்தன.
  7. 07இந்த நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.

(எம்.மனோசித்ரா)

நாட்டில் எழும் எந்தவொரு சாதாரணப் பிரச்சினையையும் அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்தி, ஜி. எல். பீரிஸின் இல்லத்தில் கூடி நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைத் தயாரிப்பது எதிர்க்கட்சியினரின் வாடிக்கையாகிவிட்டது என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சாடியுள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை (16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் டெங்கு நோய் பரவல், சிறைச்சாலை நெருக்கடிகள், வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்கள் அல்லது நிலக்கரி கப்பல் வருகை தாமதமாவது போன்ற எந்தவொரு விடயம் ஊடகங்களில் செய்தியாக வந்தாலும், எதிர்க்கட்சியினர் உடனே பதறியடித்துக்கொண்டு ஜி. எல். பீரிஸின் வீட்டிற்கு ஓடுகிறார்கள். அங்கு ஒன்று கூடி கலந்துரையாடிவிட்டு, அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைத் தயாரிப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

ஆனால், அவ்வாறு திட்டமிட்டுத் தயாரிக்கப்படும் பிரேரணைகளில் பெரும்பாலானவை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படுவதே இல்லை. கடந்த காலத்தில் பிரதமருக்கும் கல்வி அமைச்சருக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்போவதாகக் கூறி, கல்வி அமைச்சுக்கு முன்னால் உபவாசப் போராட்டங்களை நடத்தி நாடகமாடினார்கள்.

இறுதியில் அந்தப் போராட்டங்களும் கைவிடப்பட்டு, பிரேரணைகள் பற்றிய பேச்சே இல்லாமல் போனது. எனவே, இவ்வாறான வெற்றுப் பிரேரணைகளால் அரசாங்கத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253376
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
அரசியல்இந்தியநம்பிக்கைஎதிர்க்கட்சிகள்சுகாதாரம்
BestWeb.lk Top Web 2026 June Qualified