Breaking
செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள்
WorldVirakesari

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள்

June 14, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01செம்மணி மனிதப்புதைகுழியில் 353 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  2. 02இனி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வரவிருக்கும் ஜுலையில் பார்வையிட உள்ளனர்.
  3. 03அகழ்வுப் பணிகளில் 12 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டவை.
  4. 04334 எலும்புக்கூடுகள் முன்பே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
  5. 05அரசு மற்றும் நீதியமைப்பு அமைச்சர் செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிட உள்ளார்.

(நா.தனுஜா)

செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 353 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜுலை மாத முற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் செம்மணி மனிதப்புதைகுழியைச் சென்று பார்வையிடவுள்ளனர்.

செம்மணி மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 23 ஆவது நாள் அகழ்வுப்பணிகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்றன.

இதன்போது 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றில் 7 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

அதன்படி இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 353 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், அவற்றில் 334 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்வரும் ஜுலை மாத முற்பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைச் சென்று பார்வையிடுவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

அதேவேளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இவ்வாரம் அல்லது எதிர்வரும் வாரம் செம்மணி மனிதப்புதைகுழிவைப் பார்வையிடச் செல்வார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/249862
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
செம்மணிஎலும்புக்கூடுகள்ஐரோப்பிய ஒன்றியம்அகழ்வுமனிதப் புலப்படுத்தல்
BestWeb.lk Top Web 2026 June Qualified