Breaking
வீடுகளினுள் நுழைந்து திருட்டு ; மொருட்டுமுல்ல, பிலியந்தலையில் கைவரிசை காட்டிய சந்தேகநபர் கைது
WorldVirakesari

வீடுகளினுள் நுழைந்து திருட்டு ; மொருட்டுமுல்ல, பிலியந்தலையில் கைவரிசை காட்டிய சந்தேகநபர் கைது

June 18, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01மொருட்டுமுல்ல மற்றும் பிலியந்தலை பகுதிகளில் திருட்டுகளில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது.
  2. 02கல்கிஸ்ஸ பொலிஸாரால் இரத்மலானை பகுதியில் விசேட சோதனைகள் நடந்தன.
  3. 0327 வயதுடைய சந்தேகநபர் இரத்மலானை பகுதியை சேர்ந்தவர்.
  4. 04அவர் திருட்டுச் சம்பவங்களில் தொடர்பில் இருந்ததாக பொலிஸாரால் கண்டறிகிறார்.
  5. 05கைபேசி, 25 செப்புக் குழாய், மற்றும் தங்கக் காப்பு போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
  6. 06மொருட்டுமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்துகிறார்கள்.

மொருட்டுமுல்ல மற்றும் பிலியந்தலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளினுள் நுழைந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை பகுதியில், சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர் நடமாடித்திரிவதாக மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (17) புதன்கிழமை காலை இரத்மலானை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் 27 வயதுடையவர், இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக மொருட்டுமுல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் மொருட்டுமுல்ல மற்றும் பிலியந்தலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் எனவும் தெரியவந்துள்ளது.

அத்தோடு சந்தேகநபரால் அவ்வாறு திருடப்பட்ட கைபேசி ஒன்று, 25 செப்புக் குழாய்கள் மற்றும் தங்கக் காப்பு ஒன்றை அடகு வைத்தமைக்கான ஆவணச் சீட்டு ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மொருட்டுமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250238
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
திருட்டுகைதுபொலிஸ்விசாரணைமொருட்டுமுல்ல
BestWeb.lk Top Web 2026 June Qualified