Breaking
மீனவர்களே அவதானம்! ; கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை!
WorldVirakesari

மீனவர்களே அவதானம்! ; கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை!

June 18, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01மாத்தறையிலிருந்து பொத்துவில் கடற்பரப்பிற்கு சிவப்பு எச்சரிக்கை.
  2. 02எச்சரிக்கை நாளை 1 மணி வரை செல்லுபடியானது.
  3. 03காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீட்டர்.
  4. 04இக்கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
  5. 05கடற்படை மற்றும் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்த சிவப்பு எச்சரிக்கையினை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை (19) பிற்பகல் 1 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக, இக்கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம்.

எனவே, கடற்படை மற்றும் மீனவச் சமூகங்கள் இவ்விடயம் குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250279
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
காற்றுகடல்எச்சரிக்கைமீனவுகள்வளிமண்டலவியல்
BestWeb.lk Top Web 2026 June Qualified