Breaking
கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்கு: இரண்டாவது பிரதிவாதியான இரத்தினக்கல் வர்த்தகரின் மர்ம மரணம் குறித்து விசாரணைக்கு நீதிமன்ற உத்தரவு
WorldVirakesari

கெஹெலிய ரம்புக்வெல்ல வழக்கு: இரண்டாவது பிரதிவாதியான இரத்தினக்கல் வர்த்தகரின் மர்ம மரணம் குறித்து விசாரணைக்கு நீதிமன்ற உத்தரவு

June 18, 2026·3 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01கொළும்பு மேல் நீதிமன்றம் விசாரணையை உத்தரவிட்டது.
  2. 02மர்ம மரண குறித்த வழக்கு குறித்து விசாரணை நடைபெறும்.
  3. 03மூன்று பிரதிவாதிகள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  4. 04450 இலட்சம் ரூபா பணம் மறைத்து வைத்ததாக குற்றச்சாட்டு.
  5. 05மரணமான மரணுதலாளர் பற்றி விவரங்கள் வெளிவரவில்லை.
  6. 06திருத்தமைப்பு ஆணைக்குழு குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
  7. 07அதே சுற்றுலாப் பணம் மரண நாட்டில் வைப்பில் உள்ளது.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இரண்டாவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்த இரத்தினக்கல் வர்த்தகரின் மர்மமான மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாட்சியாளர்களின் பெயர் பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு முறைப்பாட்டாளருக்கு அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன, வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இரத்தினக்கல் அகழ்வில் மூலம் கிடைத்த வருமானம் எனக் குறிப்பிட்டு 450 இலட்சம் ரூபா பணத்தை மறைத்து தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்த, இரத்தினபுரி, பாம் கார்டன், தென்னவத்த முகவரியில் வசித்து வந்த, கம்பேவெல மொஹொட்டாலாலாகே நிஹால் சிசிர குமார என்பவர் அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

பிரதிவாதியான சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்லவுக்குச் சொந்தமான 450 இலட்சம் ரூபா பணம், தற்கொலை செய்துகொண்ட நபரின் பெயரிலுள்ள தனியார் வங்கியொன்றின் மூன்று நிலையான வைப்புக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டிருந்தமை தொடர்ந்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள, பிரதிவாதிகளுக்கும் முன்னாள் அமைச்சரின் உறவினரான வை.டி.எம். செனவிரத்ன பண்டார ரம்புக்வெல்லவுக்கும் எதிராகப் பணச்சுத்திகரிப்பு குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் 2026 பெப்ரவரி 12 அன்று இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக 6 குற்றப்பத்திரம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கமைய, 2023ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் மற்றும் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் 3(1)(அ) மற்றும் 3ஆம் பிரிவுக;கமைய, தண்டனைக்குரிய குற்றங்களை இழைத்தமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250228
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
சர்வதேசம்கொலைவழக்குநெறிமுறைபொதுச் சேவை
BestWeb.lk Top Web 2026 June Qualified