கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேதவத்தை, களனி பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனி பாலத்திற்கு அருகில் சடலமொன்று ஒதுங்கியிருப்பதாக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு நேற்று புதன்கிழமை (17) கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
உயிரிழந்தவர் சுமார் 35 - 40 வயது மதிக்கத்தக்க ஆண் எளவும், சுமார் 5 அடி 5 அங்குல உயரமுடையவர் எனவும், தலைமுடி ஒரு அங்குல நீளத்திற்கு வளர்க்கப்பட்டுள்ளதாகவும் நீலநிற காற்சட்டை அணிந்துள்ளதாகவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
