Breaking
மாத்தறை ஆடை விற்பனை நிலையத்தில் தீப்பரவல்
WorldVirakesari

மாத்தறை ஆடை விற்பனை நிலையத்தில் தீப்பரவல்

June 18, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01மாத்தறை பகுதியில் ஆடை விற்பனை நிலையத்தில் தீ விபத்து நடந்தது.
  2. 02பொலிஸ், தீயணைப்புப் படை மற்றும் இராணுவ அதிகாரிகள் தீயை அணைத்தனர்.
  3. 03தீ விபத்தில் அருகிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டது.
  4. 04இயற்கை உயிரிழப்புகள் பதிவாகவில்லை.
  5. 05தீ பரவலுக்கான காரணம் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
  6. 06பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபால மாவத்தை பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று (17) புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டிருந்தது.

ஆடை விற்பனை நிலையத்தில் தீ பரவியமை தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மாத்தறை மாநகர சபையின் தீயணைப்புப் படைப் பிரிவினர் மற்றும் மாத்தறை முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து பெரும் பிரயத்தனத்திற்குப் பின்னர், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

மேற்படி தீ விபத்தில் குறித்த ஆடை விற்பனை நிலையத்திற்கு அருகில் இருந்த மேலும் இரு வர்த்தக நிலையங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதுடன், தீ பரவலுக்கான காரணம் மற்றும் சேதம் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250303
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
தீ விபத்துமாத்தறைபொலிஸார்வணிகம்
BestWeb.lk Top Web 2026 June Qualified