Breaking
சேதவத்தை களனி பாலத்துகு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
WorldVirakesari

சேதவத்தை களனி பாலத்துகு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

June 18, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01கொழும்பில் ஒரு அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்கப்பட்டது.
  2. 02கண்மண இருப்பது கிராண்ட்பாஸ் சேதவத்தை களனி பாலத்துக்கு அருகே.
  3. 03சடலத்தை மீட்ட போது மேலதிக விசாரணைகள் தொடங்கபட்டன.
  4. 04மரணத்தின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
  5. 05காலம்பெற்றவர் 35 முதல் 40 வயதாகவும், 5'5" உயரமானவராகவும் இருக்கிறார்.
  6. 06சடலத்தை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

கொழும்பு, கிராண்ட்பாஸ் சேதவத்தை களனி பாலத்துக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேதவத்தை களனி பாலத்துக்கு அருகில் நேற்று (17) புதன்கிழமை காலை சடலமொன்று கரை ஒதுங்கியிருப்பதாக பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க, 5 அடி 5 அங்குல உயரமுடைய ஒருவராவார். தலையில் சுமார் ஒரு அங்குல நீளத்துக்கு முடி வளர்ந்துள்ள நிலையில், மேலங்கி எதுவும் அணியாமல், நீல நிற காற்சட்டை மாத்திரம் அணிந்துள்ளார்.

நீதிவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. கிராண்ட்பாஸ் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250237
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
கொழும்புசடலம்பொலிஸ்விசாரணைகிராண்ட்பாஸ்
BestWeb.lk Top Web 2026 June Qualified