முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரும் புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டார இன்று (18) கைது செய்யப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று பிற்பகல் சுகீஸ்வர பண்டார கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்டமை தொடர்பான விசாரணைக்காக, சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இன்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
