Breaking
யோஷித ராஜபக்ஸ கைது
WorldNewsfirst

யோஷித ராஜபக்ஸ கைது

June 17, 2026·1 min read
Photo: Newsfirst
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01யோஷித ராஜபக்ஸ இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
  2. 02இவர் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் ஆவார்.
  3. 03கடைற்படையில் பயிற்சி பெற்றதற்கான விசாரணை காரணமாக கைது.
  4. 04அமர்நிலை நீதிமன்ற வழக்கிற்கு ஆஜராக முடியாது என அறிவித்தார்.
  5. 05இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அவர் இன்று முன்னிலையுள்ளனர்.

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரான யோஷித ராஜபக்ஸ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(17) கைது செய்யப்பட்டுள்ளார்.

யோஷித ராஜபக்ஸ கடற்படையில் இணைந்து பிரித்தானியாவில் பயிற்சி பெற்றமை தொடர்பான பொறிமுறை குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விசாரணைகளுக்காக யோஷித ராஜபக்ஸ இன்று காலை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையாகுமாறு யோஷிதவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்கொன்றில் ஆஜராக வேண்டியுள்ளதால் தம்மால் வரமுடியாதென அவர் நேற்று(16) ஆணைக்குழுவிற்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.

அதற்கமைய இன்று ஆஜராகுமாறு யோஷித ராஜபக்ஸவிற்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்திருந்தது.

Continue Reading
Read the full story on Newsfirst.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Newsfirst
https://tamil.newsfirst.lk/2026/06/17/யோஷித-ராஜபக்ஸ-கைது
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Newsfirst
யோஷிதாராஜபக்ஸ்கைதுஇலஞ்சம்விசாரணை
BestWeb.lk Top Web 2026 June Qualified