Breaking
யாழில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை ; இருவர் கைது
WorldVirakesari

யாழில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை ; இருவர் கைது

June 17, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை கூடுதல்.
  2. 02இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  3. 03அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு விற்பனை செய்த கும்பல் பற்றிய தகவல்கள்.
  4. 04கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10.2 கிராம் ஐஸ் மீட்டப்பட்டது.
  5. 05இவர்கள் மாட்டு திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்.
  6. 06பொலிஸாரால் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து வந்த கும்பல் ஒன்று தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டு இருவரிடம் இருந்தும் 5.2 கிராம் மற்றும் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அண்மையில் வேலணை பகுதியில் இடம்பெற்ற மாட்டு திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250143
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
யாழ்பொதுதரம்போதைப்பொருள்கைதுமாணவர்
BestWeb.lk Top Web 2026 June Qualified