Breaking
தொல்பொருள் பெறுமதிமிக்க கல் விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது
WorldVirakesari

தொல்பொருள் பெறுமதிமிக்க கல் விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது

June 17, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01புல்மோடை பகுதியில் தொல்பொருள் கல் விற்பனை செய்ய முயற்சித்தவர்கள் கைது.
  2. 02கல் 2 கோடி ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாம்.
  3. 03சுழல் மூலம் கைதான சந்தேகநபர்கள் 29 மற்றும் 57 வயது.
  4. 04திருகோணமலை புல்முட்டை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  5. 05இந்த நடவடிக்கையால் போலீசாரின் செயல்திறனை எதிர்நோக்கி வந்ததாக கூறப்படுகிறது.

புல்மோடை பகுதியில் தொல்பொருள் பெறுமதிமிக்கது எனக் கருதப்படும் கல் ஒன்றினை சுமார் 2 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை புல்முட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னமரம் பகுதியில் கடந்த ஜூன் 15 ஆம் திகதி பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி தொல்பொருள் பெறுமதிமிக்க கல் ஒன்றினை விற்பனை செய்வதற்காகத் தயாராகி இருந்த போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

குறித்த கல்லானது சுமார் 2 கோடி ரூபா பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29 மற்றும் 57 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்முட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250127
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
கைதுதொல்பொருள்பொலிசார்விசாரணைபுல்மோடை
BestWeb.lk Top Web 2026 June Qualified