திருகோணமலை கடற்படை தளத்திற்குள் அமைந்துள்ள 'கன் சைட்' என அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய தடுப்பு முகாம் வளாகத்தை சீல் வைப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருகோணமலை நீதிவான் வியாழக்கிழமை (18) இந்த இடத்திற்கு உத்தியோகபூர்வ பரிசோதனை ஒன்றை மேற்கொள்வதற்காக விஜயம் செய்யவுள்ளார்.
இந்த முகாமில் சுமார் 60 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கப்பம் கோரப்பட்டதோடு, மேலும் பல கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
