Breaking
நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையே மழை; ஊவா, கிழக்கில் பிற்பகல் மழைக்கு வாய்ப்பு
WorldVirakesari

நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையே மழை; ஊவா, கிழக்கில் பிற்பகல் மழைக்கு வாய்ப்பு

June 17, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் மழை பெய்யக்கூடுகிறது.
  2. 02கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை கிடைக்கக்கூடிய வாய்ப்பு.
  3. 03மத்திய மலை பகுதியில் 30 - 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும்.
  4. 04மக்கள் அதிரவூட்டமோடு இருக்க வேண்டிய அவசியமாகும்.
  5. 05கடல் பிராந்தியங்களில் 50 - 60 கிலோ மீற்றர் காற்று வீசக்கூடும்.
  6. 06கடலினுள் போலீசாரின் முழுமையான சான்றிதழ் தேவையாக இருக்கிறது.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 கிலோ மீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்

சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோ மீற்றர் வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோ மீற்றர் இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

திருகோணமலை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் கல்பிட்டி தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250132
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
மழைகாற்றுகடல்மாசுபாடுபொதுமக்கள்
BestWeb.lk Top Web 2026 June Qualified