மீகொடை பகுதியில் வெசாக் தினத்தன்று தானசாலை வரிசையில் நின்ற பொதுமக்கள் மீது கெப் ரக வாகனத்தை செலுத்தியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீட்டிக்க ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி வரை சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
