Breaking
நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் மூன்று வாகனங்களை மோதிய கனரக வாகனம்
WorldVirakesari

நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் மூன்று வாகனங்களை மோதிய கனரக வாகனம்

June 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01நுவரெலியாவில் ஹக்கல பகுதியில் விபத்து நடந்தது.
  2. 02மூன்று வாகனங்கள் கடுமையாக மோதின.
  3. 03கனரக வாகனத்தின் பிரேக்குகள் செயலிழந்தன.
  4. 04இதில் பயணிகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.
  5. 05அந்த இடத்தில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
  6. 06போக்குவரத்து தவிர்க்க முடியாத விதமாக பாதிக்கப்பட்டது.
  7. 07காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் கனரக வானம் ஒன்று மூன்று வாகனங்களை கடுமையாக மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அபாயகரமான வளைவு பகுதியில் அதிக சுமைகளை ஏற்றிக் கொண்டு பயணித்த கனரக வாகனத்தில் திடீரென்று தடையாழி (பிரேக்) செயலிழந்து ஹக்கல தாவரவியல் பூங்கா அருகாமையில் வீதியோரத்தில் நிறுத்தி வைத்திருந்த ஒரு காருடனும் , கனரக வாகனத்திற்கு முன்பாக சென்றுக் கொண்டிருந்த ஒரு முச்சக்கர வண்டி மற்றும் ஜீப்புடனும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த விபத்தில் நான்கு வாகனங்களும் பலத்த சேதமடைந்த போதிலும், வாகனங்களில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

எனினும் விபத்து ஏற்பட்ட இடமானது இறுதியில் திட்வா சூறாவளி காரணமாக ஹக்கல பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு , வீதிகள் சேதமடைந்து தாழிறங்கிய பகுதியில் விபத்து ஏற்பட்டமையால் நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் குறித்த விபத்து சம்பவித்த இடத்தில் போக்குவரத்து நேரிசல் அடிக்கடி ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250078
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
விபத்துநுவரெலியாமேலதிக விசாரணைசிறிய காயங்கள்திட்வா சூறாவளி
BestWeb.lk Top Web 2026 June Qualified