Breaking
தங்கச் சங்கிலி கொள்ளை உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!
WorldVirakesari

தங்கச் சங்கிலி கொள்ளை உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

June 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01தங்கச் சங்கிலி கொள்ளை குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதானார்.
  2. 02கைதுக்கான ஆதாரமாக 06 கிராம் 210 மில்லிகிராம் ஐஸ் பூதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
  3. 03சந்தேக நபர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
  4. 04அவர் 39 வயதான மீரிகம பகுதியை சேர்ந்தவர்.
  5. 05தங்கச் சங்கிலி கொள்ளைகளில் இவர் கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  6. 06கைதுக்கான போலீசாரால் மோட்டார் சைக்கிள், வாள், மேலும் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
  7. 07மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

தங்கச் சங்கிலி கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கட்டான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவெல்லேகம பகுதியில், 06 கிராம் 210 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இன்று 16ஆம் திகதி வரை தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் மீரிகம, கிதுல்வல இஹல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, பூகொட மற்றும் கிரிந்திவெல, கொஸ்கம, பாதுகா மற்றும் கட்டுநாயக்க, வீரம்புகெதர, நாரம்மல, பொல்கஹவெல மற்றும் மினுவாங்கொட ஆகிய

பகுதிகளில் இடம்பெற்ற தங்கச் சங்கிலி கொள்ளைகள் மற்றும் சொத்துக் திருட்டுகளுடன் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு வாள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட தங்கச் சங்கிலிகளில் இருந்து உருக்கப்பட்ட 09 தங்கக் கட்டிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கட்டான பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250039
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
கொலைகைதுபோதைப்பொருள்தங்கக் கொள்ளைமோட்டார் சைக்கிள்
BestWeb.lk Top Web 2026 June Qualified