அத்தனகல்ல - கரஸ்னாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக, கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை 8.00 மணி முதல் நாளை புதன்கிழமை (17) அதிகாலை 3.00 மணி வரை 19 மணித்தியாலங்களுக்கு இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நீர் விநியோகமானது, கம்பஹா மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், கம்பஹா மற்றும் மஹர பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், வெலிவேரிய, பாலும்மஹர மற்றும் ரத்துபஸ்வல, மினுவாங்கொட, அஸ்கிரிய, உடுகம்பொல மற்றும் ஓபாத, ரன்பொகுணுகம வீட்டுத் திட்டம், ஊராபொல, அத்தனகல்ல, படலீய மற்றும் வத்துபிட்டிவல, நிட்டம்புவ, வெயங்கொட, கலகெடிஹேன, திஹாரிய மற்றும் நைவல ஆகிய பகுதிகளில் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
