Breaking
கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தில் 07 புதிய அலகுகள்
WorldNewsfirst

கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தில் 07 புதிய அலகுகள்

June 16, 2026·1 min read
Photo: Newsfirst
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் 07 புதிய அலகுகளை நிறுவியுள்ளது.
  2. 02அந்த அலகுகள் கொள்முதல் மற்றும் விசேட விசாரணை ஆகியவற்றை உள்ளடக்குகின்றன.
  3. 03புதிய பிரிவுகள் கணக்காய்வு செயல்முறைகளை மேம்படுத்தும்.
  4. 04திணைக்களத்தில் 250 வெற்றிடங்களுக்கான புதிய அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படும்.
  5. 05அனுமதி தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Colombo (News 1st) கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக புதிதாக 07 அலகுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

கொள்முதல், விசேட விசாரணை அறிக்கை, சுற்றாடல் கணக்காய்வு மற்றும் செயற்றிறன் கணக்காய்வு நடைமுறை உள்ளிட்ட அலகுகள் அவற்றுள் அடங்குகின்றன.

குறித்த பிரிவுகளை நிறுவுவதன் ஊடாக, தற்போது பொதுவான முறையில் மேற்கொள்ளப்படும் கணக்காய்வு செயன்முறையை உரிய பிரிவுகளுக்கு அனுப்பி திறம்பட முன்னெடுக்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் 250 வெற்றிடங்களுக்காக புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவிடமிருந்து கிடைத்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Read the full story on Newsfirst.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Newsfirst
https://tamil.newsfirst.lk/2026/06/16/கணக்காய்வாளர்-நாயகம்
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Newsfirst
கணக்காய்வுஅண்ணாபுதிய அலகுகள்செயல்திறன்அதிகாரிகள்
BestWeb.lk Top Web 2026 June Qualified