அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் ஆசனப் பட்டி அணிவது எதிர்வரும் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளதாக வீதிப் பாதுகாப்புப் பற்றிய தேசிய சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வீதிப் பாதுகாப்புப் பற்றிய தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன கருத்துத் தெரிவிக்கையில்,
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் முன் இருக்கைகளில் இருப்பவர்கள் மட்டுமன்றி, பின் இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளும் ஆசனப் பட்டி அணிவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலம் எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
அதற்கமைய, எதிர்வரும்; 20ஆம் திகதி முதல் இந்த ஆசனப் பட்டி சட்டம் எவ்வித விதிவிலக்குகளுமின்றி கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என வீதிப் பாதுகாப்புப் பற்றிய தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
