Breaking
வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயம் ; மூவர் உயிரிழப்பு!
WorldVirakesari

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயம் ; மூவர் உயிரிழப்பு!

June 16, 2026·3 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 15ம் தேதியான விபத்துகளில் மூவர் உயிரிழந்தனர்.
  2. 02மாத்தளை பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் கம்பியுடன் மோதியது.
  3. 03மோட்டார் சைக்கிளில் பயணியிருந்த 14 வயதுடைய இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ளனர்.
  4. 04மீரிகம பகுதியில் மற்றொரு விபத்தில் 59 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
  5. 05தெல்விட்ட பகுதியிலும் விபத்துகள் ஏற்பட்டுள்ளன, அதில் 40 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
  6. 06விபத்துகளில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  7. 07பொலிஸாரின் விசாரணைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று (15) திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

அதன்படி, மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தளை - வெஹிகல வீதியின் கடுவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சேற்றில் சிக்கியிருந்த லொறி ஒன்றை ட்ராக் ரக வாகனத்தின் உதவியுடன் மீட்டு வீதிக்கு எடுப்பதற்காக, வீதியின் குறுக்கே பாதுகாப்பற்ற முறையில் கேபிள் கம்பி ஒன்று இழுக்கப்பட்டிருந்தது. இதன்போது, வெஹிகல திசையிலிருந்து கடுவலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, குறித்த கேபிளில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த அவரது 14 வயதுடைய இரண்டு பிள்ளைகள் காயமடைந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் வெஹிகல பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய ட்ரக் வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மரங்களை ஏற்றிச் சென்ற லொறியின் உரிமையாளர் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரிகம - நால வீதியின் ஹகுருகும்புக பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நால நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் இடது பக்கமாக நடந்து சென்ற பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த பாதசாரி மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நால பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம், தெல்விட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்விட்ட - கிரிபத்கல்ல வீதியின் கொடமட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிரிபத்கல்ல திசையிலிருந்து தெல்விட்ட நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, எதிர்த்திசையில் வந்த பஸ்ஸ_டன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி ஓட்டுனரும், அதன் பின்னால் பயணித்த இரண்டு பெண்களும் தெல்விட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தெல்விட்ட பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்த விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250042
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
விபத்துசாலை பாதுகாப்புகாயம்போலீசாரின் விசாரணை
BestWeb.lk Top Web 2026 June Qualified