Breaking
குடிநீர் விலைக்கு கட்டுப்பாடு; எல் நினோவுக்கு முன்னெச்சரிக்கை – அமைச்சர் சுசில் ரணசிங்க
WorldVirakesari

குடிநீர் விலைக்கு கட்டுப்பாடு; எல் நினோவுக்கு முன்னெச்சரிக்கை – அமைச்சர் சுசில் ரணசிங்க

June 16, 2026·3 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01நாட்டில் குடிநீர் விலைகள் கட்டுப்பாட்டுக்கு புதிய தேசிய கொள்கை.
  2. 02500 மில்லி லீட்டர் போத்தல்களில் விலைகள் மாறுபடும்.
  3. 03ராத்திரி உணவகங்கள் மற்றும் போக்குவரத்தில் அதிக விலை வசூலிக்கப்படுகின்றது.
  4. 04தனி நிறுவனங்கள் விலைகளை மார்வதமாக உயர்த்துகின்றன.
  5. 05அரசாங்கம் வறட்சி நிலின் எதிரொலியுடன் வர Wasser மட்டுக்கான திட்டம்.
  6. 06அடுத்த திட்டத்தில் சூல்துறை மற்றும் பாசம் ஆற்றல் முன்னேற்றம் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

(செ.கவிஷனா)

நாட்டில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களுக்கான விலைகளில் நிலவும் முறைகேடுகளை தவிர்த்து அவற்றுக்கு முறையான கட்டுப்பாடு விலையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான புதிய தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வீடமைப்பு, மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் திங்கட்கிழமை (15) ஊடகங்களுக்கு தெரிவிக்கும்போது அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது சந்தையில் 500 மில்லி லீட்டர் அளவிலான குடிநீர் போத்தல்கள் வெவ்வேற இடங்களில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக இரவு நேர உணவகங்கள் பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் பொதுமக்களிடம் அதிக விலை வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர் கட்டணங்கள் வருடத்திற்கு 2 முறை அறிவியல் ரீதியான சூத்திரத்தின் படி மறுசீரமைக்கப்பட்டாலும், தனியார் நிறுவனங்கள், பிரதேச சபைகள் மற்றும் சில கிராமிய அமைப்புகளினால் விநியோகிக்கப்படும் குடிநீரின் விலைகளில் எவ்வித ஒழுங்குமுறைப்படுத்தலும் இதுவரை இருக்கவில்லை. புதிதாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த தேசிய குடிநீர் விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையின் மூலம், நுகர்வோருக்கு நியாயமான விலையில் குடிநீர் கிடைக்கப் பெறும் என்றும், தன்னிச்சையாக விலைகளை உயர்த்தும் நிறுவனங்கள் முறைப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் ஏற்படக்கூடிய 'எல் நினோ' வறட்சி நிலைமை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நீர் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக அரசாங்கம் அனைத்துப் பிரிவுகளையும் தயார்படுத்தியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புவாய்ந்த நிறுவனங்களையும் ஒன்றிணைத்து முதற்கட்டக் கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. அத்துடன், ஜனாதிபதியும் இந்த நிறுவனங்களை நேரில் அழைத்து, அவர்களின் தயார்நிலை மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி முதல் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பங்களிப்புடன், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கீழ் மட்ட அதிகாரிகள் வரை வறட்சி அபாயம் குறித்து விழிப்புணர்வூட்டும் விசேட திட்டமொன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது. எந்தெந்தப் பகுதிகளில் எந்தக் காலப்பகுதியில் நீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்பது குறித்து அதிகாரிகள் முன்கூட்டியே தயார்படுத்தப்படுவர். மேலும், இந்த அனர்த்தச் சூழலை எதிர்கொள்வது குறித்து அனைத்துத் திணைக்களங்களும் தங்களின் எழுத்துப்பூர்வமான விசேட திட்டங்களைத் தயாரித்து வருகிறது என்றார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250022
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
குடிநீர்விலைகட்டிவறட்சிஅரசாங்கம்திட்டம்
BestWeb.lk Top Web 2026 June Qualified