Breaking
அட்டன் - கொழும்பு வீதியில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து: சாரதி காயம்!
WorldVirakesari

அட்டன் - கொழும்பு வீதியில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து: சாரதி காயம்!

June 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01முச்சக்கரவண்டி கெரொலினா தோட்டத்தில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
  2. 02விபத்து நேற்று மாலை 4:00 மணியளவில் நடந்தது.
  3. 03சாரதி காயமடைந்து வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
  4. 04ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
  5. 05முச்சக்கரவண்டிக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன.

அட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கெரொலினா தோட்டம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி, சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி காயமடைந்துள்ளார்.

கட்டுநாயக்கவிலிருந்து தலவாக்கலை - லிந்துலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே, நேற்று திங்கட்கிழமை (15) மாலை 4:00 மணியளவில் இந்த விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டுனருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாகவே முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தினால் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250064
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
விபத்தைமுச்சக்கரவண்டிகாயம்
BestWeb.lk Top Web 2026 June Qualified