கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இன்று (20) மாலை ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது. இதனால் குறித்த ரயில் நிலையத்தில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில், தாமதமாகி மேடையை வந்தடைய முற்பட்டபோது தடம் புரண்டுள்ளது.
இதன்போது ரயிலின் ஒரு பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியுள்ளதாகவும் மாலை 4.35 மணியளவிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ரயில் தடம் புரண்டதால் ரயில் நிலையத்தின் இரண்டு மேடைகளில் முழுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதேவேளை மாலை வேளை பயணிக்கும் மற்றைய அலுவலக ரயில்கள் சிலவற்றின் போக்குவரத்து நிலையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
