Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
கொழும்பு மாநகரசபை ஊழல் விசாரணை: முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க வாக்குமூலம்
PoliticsVirakesari

கொழும்பு மாநகரசபை ஊழல் விசாரணை: முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க வாக்குமூலம்

July 18, 2026·3 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01கொழும்பு மாநகரசபையில் ஊழல் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
  2. 02முன்னாள் மேயர் ராசி சேனாநாயக்க வாக்குமூலம் அளித்தார்.
  3. 032022 ஆம் ஆண்டு குறைந்த வருமான வீடுகளுக்கு வழங்கிய வவுச்சர்களில் நிதி மோசடி குற்றம்.
  4. 04தொற்றுநோய் காலத்தில் உணவுக்கொரு திட்டம் செயற்படுத்தப்பட்டது.
  5. 05ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு 15 வருடங்களில் இடம்பெற்ற ஊழல் குறித்து விசாரணை செய்கிறது.
  6. 061948 ஆம் ஆண்டின் சட்டத்தின் அடிப்படையில் ஆணைக்குழு நிறுவப்பட்டது.
  7. 07சேவைக்காலத்தை 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியும்வரையிலும் நீடித்து உள்ளது.

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் தேடிப்பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் ராேசி சேனாநாயக்க வெள்ளிக்கிழமை வாக்குமூலம் வழங்கியிருந்தார். ஆணைக்குழுவின் செயலாளரால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தலுக்கு அமையவே அவர் சமூகமளித்திருந்தார்.

2022 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, கொழும்பில் உள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் தேவையுடைய மக்களுக்கு சதொச மூலம் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களை விநியோகித்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளவே இவ்வாறு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

விசாரணை முடிவடைந்த பின்னர் அவர் வெளியில் வந்து இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, நாங்கள் சதொச மூலம் ஏழை மக்களுக்கு உணவு வவுச்சர்களை வழங்கினோம். அந்த வேலைத்திட்டம் குறித்து அவர்களுக்கு இருந்த கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காகவே என்னை அழைத்திருந்தனர். இந்த விடயத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

கொழும்பு மாநகர சபையில் கடந்த 15 வருட காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி செயற்பாடுகளால் அரசாங்கத்தின் சொத்துக்களுக்கும் வருமானத்திற்கும் ஏற்பட்ட பாரிய நஷ்டங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் பிரகாரம், 2025 டிசம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இது ஸ்தாபிக்கப்பட்டது. கொழும்பு 3. காலி வீதியில் அமைந்துள்ள இந்த ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ சேவைக்காலம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த போதும் விசாரணை நடவடிக்கைகளை மேலும் விரிவாக்குவதற்காக அதன் சேவைக்காலத்தை இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதி நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253545
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
கொழும்புமாநகரசபைவிசாரணைவவுச்சர்ஊழல்
BestWeb.lk Top Web 2026 June Qualified