Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
யாழ். வலி வடக்கு 6 ஆயிரம் ஏக்கர் வர்த்தமானியை நீக்குங்கள் ; ஆட்சி மாறினாலும் அரசின் நிகழ்ச்சி நிரல் மாறவில்லை - ஜான்சன் பிரிடாரோ
PoliticsVirakesari

யாழ். வலி வடக்கு 6 ஆயிரம் ஏக்கர் வர்த்தமானியை நீக்குங்கள் ; ஆட்சி மாறினாலும் அரசின் நிகழ்ச்சி நிரல் மாறவில்லை - ஜான்சன் பிரிடாரோ

July 17, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01ஜனவரி 17 ஆம் தேதி மயிலிட்டியில் காணி விடுவிப்பு போராட்டம் நடந்தது.
  2. 02ஜான்சன் பிரிடாரோ மக்கள் காணிகளை விடுவிக்க வேண்டும் என்றார்.
  3. 032013 இல் பாதுகாப்பு அமைச்சு 6000 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தியது.
  4. 04நடப்பு அரசுக்கு மக்களின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை.
  5. 05தேசிய பாதுகாப்பு பெயரில் மக்கள் காணிகள் பறிக்கப்படுவதாக அவர் கூறினார்.
  6. 06மரக்கறிகளை விற்பனைக்கூடிய இராணுவம் காணிகளை உருக்கொள்கிறதாக தெரிவிக்கப்பட்டது.

யாழில் 2013 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் மக்களின் காணிகளுக்கான வர்த்தமானிய உடனடியாக நீக்க வேண்டுமென சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் இணைப்பாளர் ஜான்சன் பிரிடாரோ தெரிவித்தார்.

இன்று (17) வெள்ளிக்கிழமை யாழ். மயிலிட்டியில் 13 ஆவது வாரமாக நடைபெற்று வரும் காணி விடுவிப்புக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் காணிகள் மக்களுக்கு என கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் மக்களின் காணிகளை விடுவிப்பதில் தயக்கம் காட்டுகிறது.

2013 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்பட்ட வலி வடக்கு மக்களின் சுமார் 6,000 ஏக்கர் காணிக்கான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை இரத்துச் செய்யப்படவில்லை.

தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மற்றும் பலாலி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பிலும் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆனால் பாதிக்கமட்ட மக்களின் குரல்களுக்கு தற்போதைய அரசாங்கமும் செவி சாய்க்காமல் கடந்த கால அரசாங்கங்களைப் போல அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு இயங்கும் அரசாங்கமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களுடைய வளமான காணிகளை கையகப்படுத்தி 35 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இன்று வரை பாதிக்கப்பட்ட மக்கள் தமது காணிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பாதுகாப்புத் தேவையென காணியை சுவீகரித்துவிட்டு மக்களின் காணிகளில் விவசாயம் செய்து இராணுவம் மரக்கறிகளை விற்று வருமானம் ஈட்டுகிறார்கள் இது நாட்டின் திறைசேரிக்கா செல்கிறது.

ஆகவே மக்களின் காணிகள் மக்களுக்கு எனக் கூறிவரும் அரசாங்கம் விரைவாக மக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதோடு வெளியிடப்பட்ட 6 ஆயிரம் ஏக்கருக்கான வர்த்தமானியையும் உடனடியாக நீக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253493
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
யாழ்காணிபோராட்டம்விடுவிப்புஅரசியல்
BestWeb.lk Top Web 2026 June Qualified