Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான ஆறு துறைகளின் கீழ் தயாரிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட முன்மொழிவு கையளிப்பு!
PoliticsVirakesari

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான ஆறு துறைகளின் கீழ் தயாரிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட முன்மொழிவு கையளிப்பு!

July 17, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01மாற்றுத்திறனாளிகளுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.
  2. 02மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
  3. 03இந்த திட்டம் 'ஒன்றாக பிடி தளராது' கொள்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
  4. 04சுற்றுலாத் துறையில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு செயல்படுத்தப்படும்.
  5. 05வலைப்படர்ப் பயிற்சிகள் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
  6. 06அரசாங்கம் பல கொள்கை தீர்மானங்களை எடுத்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சமூகம் ஆகியவற்றினால் முக்கியமான 6 துறைகளின் கீழ் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வியாழக்கிழமை (16) பிற்பகல் கையளிக்கப்பட்டது.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு பெருமளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்காகவும், அவர்களுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டமைக்காகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் சார்பில் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அவர்களை சமூகத்தின் சாதாரண பங்காளிகளாக மாற்றுவது இன்றியமையாதது. அதற்காக 'ஒன்றாக பிடி தளராது' தேசிய கொள்கை வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளும் அதற்கேற்பவே அமைக்கப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், சுற்றுலாத் துறையில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அதிகரிப்பது மற்றும் அவர்களுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பாரம்பரியமாக மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பயிற்சிகள் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு சந்தையில் போதுமான வாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்பதும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளை சமூகத்தின் சம பங்காளிகளாக மாற்றுவதற்கு அரசாங்கம் பல கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதியின் செயலாளர், அதற்குத் தேவையான சுற்றறிக்கைகள் மற்றும் பணிப்புரைகளை விரைவாக வெளியிடுவதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவினர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253527
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
மாற்றுத்திறனாளிகள்வரவு செலவுத் திட்டம்தொகுப்புஅரசாங்கம்
BestWeb.lk Top Web 2026 June Qualified