Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
மாணவர்கள், ஊடகவியலாளர்களின் வீசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்கா அறிவிப்பு
PoliticsVirakesari

மாணவர்கள், ஊடகவியலாளர்களின் வீசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்கா அறிவிப்பு

July 17, 2026·5 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை புதிய வீசா விதிகளை நிர்ணயித்துள்ளது.
  2. 02சர்வதேச மாணவர்களுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே வீசா காலம்.
  3. 03வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு 240 நாள் மட்டுமே வழங்கப்படும்.
  4. 04சீன ஊடகவியலாளர்களுக்கான வீசா காலம் 90 நாட்களாக குறைகிறது.
  5. 05விசா நீடிப்புக்கான விண்ணப்பம் தேவைப்படும்.
  6. 062024-ல் 1.8 மில்லியன் மாணவர் வீசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
  7. 07மாநிலத்துக்குள் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
  8. 08இந்த புதிய விதிகள் 60 நாட்களில் பயிற்சிக்குள் வரும்.

அமெரிக்காவிற்கு செல்லும் சர்வதேச மாணவர்கள், கலாசார பரிமாற்றத் திட்ட பார்வையாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தங்கியிருக்கக்கூடிய வீசா காலக்கெடுவை கடுமையாகக் குறைத்து, நிலையான ஒரு காலப்பகுதியை நிர்ணயிப்பதற்கான புதிய இறுதி விதியை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை வியாழக்கிழமை (16) வெளியிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜனவரியில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதிாக பொறுப்பேற்றது முதல் தீவிரமாக்கப்பட்டு வரும் குடியேற்றக் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலம், குறிப்பிட்ட கல்வி அல்லது வேலைவாய்ப்பு முடியும் வரை அமெரிக்காவில் தங்கியிருக்க விசாக்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இனிவரும் காலங்களில் அவற்றுக்கு நிலையான உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மாணவர்கள் மற்றும் கலாசார பரிமாற்றத் திட்டங்களில் வருவோருக்கான வீசா காலம் இனி அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே வழங்கப்படும்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு இதுவரை பல ஆண்டுகள் வழங்கப்பட்டு வந்த வீசா காலம், இனி அதிகபட்சம் 240 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு இந்த வீசா காலம் 90 நாட்களாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையான காலப்பகுதிக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருக்க விரும்பும் வீசா தாரர்கள், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடம் வீசா நீடிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய வேண்டும்.

அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என உள்நாட்டுப் பாதுகாப்புத் து தெரிவித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 1.8 மில்லியனுக்கும் அதிகமான மாணவர் வீசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 11 சதவீதம் அதிகமாகும். அத்துடன், 500,000-க்கும் அதிகமான பரிமாற்றப் பார்வையாளர்களும், 37,300 ஊடகவியலாளர்களும் 2024 நிதியாண்டில் வீசா பெற்றுள்ளனர்.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்களைக் கண்காணிப்பது தங்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பரிமாற்ற வீசாக்களில் வருபவர்கள் தங்களது வீசாக்களைப் பயன்படுத்திப் பல தசாப்தங்களாக அமெரிக்காவிலேயே தங்கியிருக்கும் பல உதாரணங்கள் உள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த புதிய இறுதி விதியானது பெடரல் பதிவேட்டில் வெளியிடப்பட்ட 60 நாட்களில் நடைமுறைக்கு வரும்.

எனினும், இந்த நடைமுறை அமெரிக்க பாராளுமன்றத்தின் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர்களின் தத்துவார்த்தக் கருத்துக்களைக் காரணம் காட்டி அவர்களின் வீசாக்கள் மற்றும் கிரீன் கார்ட்களை இரத்து செய்துள்ள நிலையிலும், இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோரின் சட்டப்பூர்வ அந்தஸ்தைப் பறித்துள்ள நிலையிலும் இந்த புதிய கட்டுப்பாடு சர்வதேச சமூகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253442
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
விசாதமிழர்சமுதாயம்அமெரிக்காகுடியேற்றம்
BestWeb.lk Top Web 2026 June Qualified