Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
செம்மணி மனிதப் புதைகுழி குற்றவாளி : சோமராத்னாவின் வாக்குமூலம் ஈபிடிபியின் கலங்கத்தை போக்கியிருக்கும் - டக்ளஸ் தேவானந்தா
PoliticsVirakesari

செம்மணி மனிதப் புதைகுழி குற்றவாளி : சோமராத்னாவின் வாக்குமூலம் ஈபிடிபியின் கலங்கத்தை போக்கியிருக்கும் - டக்ளஸ் தேவானந்தா

July 17, 2026·3 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01சொல்லப்பட்ட கருத்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு எதிரானது.
  2. 02தெற்காசிய தமிழ்நாடு கட்சிகள் மீது குற்றச்சாட்டுகள் நீடிக்கின்றன.
  3. 03செம்மணி மனிதப் புதைகுழிகள் அகழ்ந்துள்ளது.
  4. 04சோமரத்ன ராஜபக்‌ஷ பன்னாட்டு மன்னிப்பை கோருகிறார்.
  5. 05மண்டதீவில் கூட புதைகுழி உள்ளதாக கூறப்படுகிறது.
  6. 06அதற்கு தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
  7. 07கொழும்பில் பயன்படுத்திய அலுவலகங்களில் எளிதில் எந்த தடயமும் இல்லை.
  8. 08எம் அரசியல் தமிழ் மக்களின் மேன்மைக்கு dedicada.

செம்மணி மனிதப் புதைகுழிகள் விவகாரத்தில் குற்றவாளியாக்கப்பட்ட இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்‌ஷ அண்மையில் தெரிவித்த கருத்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது சேறு பூசியவர்களுக்கு பதில் வழங்குவதாக அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நேற்று (16) வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கட்சிகள் எனக் கூறுபவர்கள் தமது சுயலாப அரசியலை முன்னெடுப்பதற்காக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது சிறு பூசல்களை மேற்கொண்டார்கள் தற்போதும் மேற்கொண்டு வருகிறார்கள்.

அவர்களுடைய அரசியலைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் மக்களை தவறான பாதையில் இட்டுச் சென்று மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் அபிலாசைகளையும் அபிவிருத்திகளையும் தடுப்பது கவலை அளிக்கிறது.

தற்போது செம்மணி மனிதப் புதைக்குழி தோண்டப்பட்டு வருகின்ற நிலையில் பல நூறு எலும்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறது.

செம்மணி புதைகுழி விவகாரத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியையும் இணைத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் அது பிசுபிசுத்து போனது.

செம்மணி இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது எங்கள் மீது பழி போட்ட சக தமிழ் கட்சிகளுக்கு செம்மணி விவகாரத்தில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்ததாக ஊடகங்களில் வெளிவந்த கருத்தை எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.

அதாவது தனக்கு பொது மன்னிப்பு வழங்கினால் செம்மணியுடன் தொடர்புடைய பல இராணுவ உயர் அதிகாரிகள் தொடர்வில் உண்மையை கூறுவேன் என்றார் அவருடைய கருத்துக்களில் ஈபிடிபி தொடர்பில் எந்தக் கருத்துக்களையும் கூறவில்லை.

அவருடைய அந்தக் கருத்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது தமிழ் சக கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்திருக்கிறது.

அதேபோன்று மண்டதீவிலும் மனிதப் புதைக்குழி இருப்பதாகவும் அதற்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் தொடர்பாக அண்மையில் ஒரு கருத்து வெளி வந்தது.

அது தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவுக்கு கடிதம் எழுதினேன் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் உண்மையை ஆராயுமாறு தெரிவித்திருக்கிறேன்.

அதேபோன்று கொழும்பில் நாங்கள் பயன்படுத்திய அலுவலகங்களிலும் இவ்வாறு புதைகுழிகள் இருப்பதாக சில வங்குரோத்து தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்தனர்.

நாங்கள் பயன்படுத்திய அலுவலகங்கள் நாங்கள் கைவிட்டதன் பின்னர் பல மாடிகளை கொண்ட கட்டடங்களாக மாற்றப்பட்ட போது எந்த தடயங்களும் வெளிவரவில்லை.

செம்மணியில் ஒரு அடி அகழ்ந்தெடுக்கும் போது என்புத் தொகுதிகள் வருகிறது என்றால் கொழும்பில் நாங்கள் பயன்படுத்திய அலுவலகம் இருந்த இடங்கள் இன்று 30 மாடிகளுக்கு மேல் கட்டப்பட்டிருக்கிறது.

அவ்வாறு மாடிகளை அமைக்கும் போது ஆக குறைந்தது 15 அடி ஆழமாவது தோண்டி இருப்பார்கள் அவ்வாறு எந்த தடயங்களும் வரவில்லை.

ஆகவே செம்மணி விவகாரம் எம் மீது கலங்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு சிறந்த ஒரு பாடமாக இருக்கின்ற நிலையில் எனது அரசியல் தமிழ் மக்களுக்கான அரசியலாகவே இருக்கும் சுயநல அரசியலாக எக்காலத்திலும் இருக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253454
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
செம்மணிதமிழ் தேசியம்கட்சிகள்அரசியல்குற்றச்சாட்டு
BestWeb.lk Top Web 2026 June Qualified