Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
பொருளாதார நெருக்கடியிலும் அரசாங்கத்தின் நல்லாட்சி நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் பாராட்டு - தினன தகுண கூட்டமைப்பு தெரிவிப்பு
PoliticsVirakesari

பொருளாதார நெருக்கடியிலும் அரசாங்கத்தின் நல்லாட்சி நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் பாராட்டு - தினன தகுண கூட்டமைப்பு தெரிவிப்பு

July 16, 2026·3 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01நாட்டின் பெரும்பான்மையாலும் பொருளாதார நிலை மோசமாக உள்ளது.
  2. 02அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்களிடையே கவுரவமளிக்கின்றன.
  3. 0351.4% மக்கள் குடும்ப பொருளாதாரம் குறைந்ததாக தெரிவித்துள்ளனர்.
  4. 0462.8% மக்கள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் திருப்தி உள்ளனர்.
  5. 05சிங்கள சமூகத்தினர் 26.5% அதிருப்தி பதிவு செய்து உள்ளனர்.
  6. 06எதிர்க்கட்சிகள் அரசு மீது குற்றச்சாட்டுகள் செய்கின்றன.
  7. 07சமூக அவலங்கள் அரசியல் விரக்திக்கு வழி வகுக்கலாம்.
  8. 08எதிர்க்கட்சியினர் உண்மையான பொருளாதார சீர்திருத்தங்களை வலியுறுத்த வேண்டும்.

(க.சிவலிங்கமூர்த்தி)

நாட்டின் பெரும்பான்மையான மக்களின் குடும்பப் பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ள போதிலும், அரசாங்கத்தின் பேரிடர் முகாமைத்துவம் மற்றும் ஊழல் எதிர்ப்பு போன்ற நல்லாட்சி நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் பாராட்டு நிலவுவதாக தினன தகுண கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் அண்மையில் நடத்திய சமூகக் குறிகாட்டி கருத்துக்கணிப்பின் மூலம் வெளிவந்துள்ள பொருளாதார நிலை, பேரிடர் முகாமைத்துவம் மற்றும் இன ரீதியான திருப்தி நிலை சார்ந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தினன தகுண கூட்டமைப்பின் தலைமைத்துவ சபை மற்றும் செயற்குழு வியாழக்கிழமை (16) விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கருத்துக்கணிப்புத் தரவுகளின்படி 51.4 சதவீதமானோர் தங்களது குடும்பப் பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். வாழ்க்கைச் செலவைக் கையாளுவது குறித்து நாடு சமமாகப் பிளவுபட்டுள்ள பின்னணியிலும், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சித் திறன் குறித்து 62.8 சதவீத திருப்தி காணப்படுகிறது.

முன்னைய ஆட்சிமுறைகளால் முறையாக சீரழிக்கப்பட்ட நிறுவன மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டே தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பொதுமக்கள் நினைப்பதே இதற்குக் காரணமாகும்.

அதேவேளை, பொருளாதாரம் சாரா, அடையாள மற்றும் அமைப்புரீதியான விளைவுகள் தொடர்பாக அரசாங்கம் மிக உயர்ந்த புள்ளிகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக, தித்வா சூறாவளி முகாமைத்துவம் மற்றும் நிவாரணச் சேவைகள் குறித்து 68.6 சதவீதமானோரும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பாக 51.6 சதவீதமானோரும் திருப்தியடைந்துள்ளனர்.

தித்வா சூறாவளியின் சில மோசமான விளைவுகள் அரசாங்கத்தின் அலட்சியத்தால் ஏற்பட்டவை என்று எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுகளை மக்கள் தமக்குள் எடுத்துக்கொள்ளவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இருப்பினும், அரசாங்கத்தின் மீதான திருப்தி நிலையில் தெளிவான இன ரீதியான பிளவும் காட்டப்பட்டுள்ளது. சிறுபான்மைச் சமூகங்களிடையே தேசிய மக்கள் சக்தியின் ஆட்சித் திறன் குறித்த திருப்தி 80 சதவீதத்தை நெருங்கிய போதிலும், சிங்களச் சமூகத்தினிடையே அது 57.3 சதவீதம் வரை கணிசமாகக் குறைந்துள்ளதுடன், அவர்கள் 26.5 சதவீத என்ற அதிகபட்ச அதிருப்தியையும் பதிவு செய்துள்ளனர். மேலும், சிங்களவர்களில் 53.9 சதவீதமானோர் தங்களது குடும்பப் பொருளாதாரம் மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, எதிர்பார்ப்புகளுக்கும் யதார்த்தத்து;கும் இடையிலான கடுமையான மோதலை சிங்களப் பெரும்பான்மையினரே அதிகம் எதிர்கொண்டு வருகின்றனர். சிங்களச் சமூகம் எப்போதுமே இலங்கையின் அரசியல் மாற்றங்களின் பாரம்பரிய அடிப்படையாகும் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, மக்கள் கருத்தில் நிலவும் தங்களது பொருளாதார வாழ்க்கை குறித்த அதிருப்தியானது சமூக அபிலாஷைகளைத் தாண்டி ஓர் அரசியல் விரக்தியாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.

எனவே, எதிர்க்கட்சியானது வெறுமனே பொருளாதாரத்தைப் பற்றி மட்டும் கூச்சலிடாமல், பொதுமக்கள் கோரும் உண்மையான பொருளாதார சீர்திருத்தங்களின் உண்மையான பிணையாளராகத் தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253380
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
அரசியல்பொருளாதாரம்சமூகஎதிர்க்கட்சிமக்கள் கருத்துக்கள்
BestWeb.lk Top Web 2026 June Qualified