Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
கட்டார் விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடு திரும்பினார்!
PoliticsVirakesari

கட்டார் விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடு திரும்பினார்!

July 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01பிரதமர் ஹரிணி அமரசூரிய கட்டாரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
  2. 02முன்னாள் மன்னர் அமீர் மறைவுக்கான இரங்கலைத் தெரிவித்தார்.
  3. 03ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியை சந்தித்தார்.
  4. 04அண்மையில் மன்னரின் குடும்பத்தினருக்கும் அனுதாபங்களைப் பகிர்ந்தார்.
  5. 05அல் வஜ்பா அரண்மனையில் மேலும் சந்திப்புகள் நடந்தன.
  6. 06கட்டார் சமூக மேம்பாட்டு அமைச்சர் உட்பட பலருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கட்டாரின் முன்னாள் மன்னர் அமீரின் மறைவுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாகத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதற்காக அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (16) வியாழக்கிழமை காலை நாடு திரும்பியுள்ளார்.

ஹரிணி அமரசூரிய, கட்டாரின் லுசைல் அரண்மனைக்கு விஜயம் செய்து, கட்டார் அமீர் பெருமதிப்பிற்குரிய ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியை நேரில் சந்தித்துத் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

அத்துடன், அரச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும் இலங்கை மக்கள் சார்பாகத் தனது அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் தொடர்ந்து அல் வஜ்பா அரண்மனைக்கு விஜயம் செய்து கட்டார் அமீரின் தாயாரும் கட்டார் அறக்கட்டளையின் தலைவருமான ஷேக்கா மோசா பின்ட் நாசரைச் சந்தித்து இலங்கை சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் அமீரின் மகள்களான ஷேக்கா அல் மாயாசா பின்ட் ஹமாத் அல் தானி மற்றும் ஷேக்கா ஹிந்த் பின்ட் ஹமாத் அல் தானி ஆகியோருக்கும், அரச குடும்பத்தின் ஏனைய பெண் உறுப்பினர்களுக்கும் பிரதமர் தனது அனுதாபங்களைத் தெரிவித்தார்.

இந்த இரங்கல் விஜயத்தின் போது, கட்டார் நாட்டின் சமூக மேம்பாடு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் புதைனா பின்ட் அலி அல் ஜப்ர் அல் நுஐமிக்கும் இலங்கை மக்கள் மற்றும் அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253341
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
கட்டார்மன்னர்இரங்கல்லங்காபிரதமர்
BestWeb.lk Top Web 2026 June Qualified