Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் பிரதமரைச் சந்தித்து விடைபெற்றார்
PoliticsVirakesari

இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் பிரதமரைச் சந்தித்து விடைபெற்றார்

July 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01சவூதி அரேபிய தூதுவர் இலங்கைக்கு நன்றி தெரிவித்தார்.
  2. 02மீண்டும் ஆதரவு வழங்குவதாக உறுதியளித்தார்.
  3. 03பிரதமர் துணை சவூதி அரசாங்கத்திற்கே நன்றி கூறினார்.
  4. 04இரு நாடுகளின் இடையே உறவுகள் வலிமைப்படுத்தப்பட்டன.
  5. 05உடனடி மனிதாபிமான உதவிகளை பாராட்டினார்.
  6. 06கல்வித்துறைக்கான தொடர்ச்சியான ஆதரவைச் செலுத்தினார்.

தனது பதவிக்காலத்தில் இலங்கை அரசாங்கம் வழங்கிய நெருக்கமான ஒத்துழைப்புக்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்த தூதுவர் அல்-கஹ்தானி, எதிர்காலத்திலும் இலங்கைக்குச் சவூதி அரேபிய இராச்சியம் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர், காலித் ஹமூத் நாசர் அல்கஹ்தானி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து விடைபெறும் முகமாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை வியாழக்கிழமை (16) அலரி மாளிகையில் சந்தித்தார்.

இதன்போது, தூதுவரை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் சவூதி அரேபிய இராச்சியத்திற்கும் இடையில் நிலவிவரும் நீண்டகால நட்புறவையும், பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியாக நிலவிவரும் ஒத்துழைப்புகளையும் பாராட்டினார்.

அத்தோடு, 'டித்வா' சூறாவளியின் தாக்கத்தைத் தொடர்ந்து, இலங்கைக்கு வழங்கப்பட்ட உடனடி மனிதாபிமான உதவிகளுக்காகச் சவூதி அரேபிய இராச்சியத்தின் அரசாங்கத்திற்குப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார். சவூதி அரசாங்கத்தின் நிதி அனுசரணையிலான செயற்திட்டங்களின் ஊடாக, இலங்கையின் கல்வித்துறைக்கு வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவிற்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

தனது பதவிக்காலத்தில் இலங்கை அரசாங்கம் வழங்கிய நெருக்கமான ஒத்துழைப்புக்கும் ஆதரவிற்கும் தூதுவர் அல்-கஹ்தானி நன்றி தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் இலங்கைக்குச் சவூதி அரேபிய இராச்சியம் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கும், பரஸ்பர நலன்களுக்காக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் இரு தரப்பினரும் தங்களின் கூட்டு அர்ப்பணிப்பை இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் சவூதி அரேபியாவின் பிரதித் தூதுவர் யாசிர் அல்ஹாசிமி, தூதுவரின் செயலாளர் ஏ.சி.ஏ. மஸாஹிர் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாஹவத்த, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253415
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
இலங்கைசவூதி அரேபியாதூதுவர்அதிகாரிஉதவி
BestWeb.lk Top Web 2026 June Qualified