Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு
PoliticsVirakesari

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு

July 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01தாராள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சுமத்தினார்.
  2. 02வரம்பற்ற வரிவிதிப்புகள் மக்களை பாதிக்கின்றன.
  3. 03விவசாயிகள் அரசாங்கத்தின் கொள்வனவால் பாதிப்பு அடைகின்றனர்.
  4. 04முச்சக்கர்வண்டி ஓட்டுநர்கள் வாழ்வாதாரங்களை இழக்கின்றனர்.
  5. 05தலைவர்களின் சொகுசுக்கான வாழ்க்கை மீது விசாரணை வேண்டியது.
  6. 06சிறைச்சாலையில் சந்தேக நபர்களின் சுட்டுக்கொலைக்கு பொறுப்பு அரசாங்கத்துக்கு.
  7. 07எம்மக்களின் குரலாக இருந்தவர்கள் இன்று மாறிவிட்டனர்.
  8. 08எதிர்க்கட்சியினரை ஒன்றிணைந்து போராட வேண்டியது.

(எம்.மனோசித்ரா)

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாது, வரம்பற்ற வரி விதிப்புகள் மற்றும் எரிபொருள் மாபியாக்கள் மூலம் தற்போதைய அரசாங்கம் மக்களைக் கொடூரமாகச் சுரண்டி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஆனந்த பாலித கடுமையான குற்றஞ்சுமத்தினார்.

வியாழக்கிழமை (16) கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் வெறும் 2 வீதத்தை மாத்திரமே அரசாங்கம் கொள்வனவு செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் தட்டுப்பாடு இல்லாத நிலையிலும் கியூ.ஆர். கோட்டா முறையினால் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களும் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

தேர்தல் காலத்தில் எளிய மக்களுடன் ஒன்றோடு ஒன்றாக இருந்த லால் காந்த, வசந்த சமரசிங்க போன்ற தலைவர்கள், இன்று குறுகிய காலத்துக்குள் மாளிகை போன்ற சொகுசு வீடுகளையும் சொகுசு வாகனங்களையும் வாங்கியுள்ளமை எவ்வாறு என்பது குறித்து ஜனாதிபதி உடனடியாக விசாரணை நடத்தவேண்டும்.

மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்படாத 23 சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். பொதுமக்களின் குரலாக அன்று ஒலித்தவர்கள் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்ற பின்னர் மாடுகளின் மொழியிலேயே பேசி வருகின்றனர். இந்த மக்கள்விரோத அரசாங்கத்தின் போக்கை முறியடிக்க ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் விவசாயிகளும் வீதிக்கு இறங்கிப் போராடவேண்டும் என்றார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253406
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
வாக்குறுதிகள்நிர்வாகம்விவசாயம்இருப்பிடங்கள்தர்மம்
BestWeb.lk Top Web 2026 June Qualified